கல்வி உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இருபத்தைந்து விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் இருபதாந் தேதி தொடங்கியுள்ளது. இதற்கு, rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றார்கள். இந்த கட்டாயக் கல்வி விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள் முடிவடைய இருப்பதால் இதை நீடிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் இருபத்தினான்காம் தேதி அன்று இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பள்ளிகளிலும் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளை மே மாதம் இருபத்தொன்பதாம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
