Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 லோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, வினதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், நாத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ