spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2வது நாளாக அதிரடி ஏற்றம்.. தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?..

2வது நாளாக அதிரடி ஏற்றம்.. தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?..

-

- Advertisement -
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் தங்கம் விலை, அவ்வப்போது விலை கிடுகிடுவென உயர்ந்தாலும் அதன் மவுசு குறையவில்லை. மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் அதிகரித்தது.
சென்னையில் தங்கம் விலை - 17 அக்டோபர் 2024

இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.75ம், சவரனுக்கு ரூ.600ம் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,205க்கும் ஒரு சவரன் ரூ. 57,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

MUST READ