Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

-

இன்று நள்ளிரவு முதல் ரூ.5- ரூ.850 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

கரூர் மாவட்டம் மணவாசி, வேலஞ்செட்டியூர் சுங்கச் சாவடிகளில் ஆக.31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் வாகன சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Toll-on-National-Highways__factly

தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் சில சுங்கச் சாவடிகளில் ஏப். 1, சிலவற்றில் செப். 1 ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. கரூர் மாவட்டம் கரூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி மற்றும் கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலஞ்செட்டியூர் சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1ம் தேதி சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

2 சுங்கச் சாவடிகளிலும் உயர்த்தப்பட்டுள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு ஆக. 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. கரூர் மாவட்டம் வேலஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்களுக்கு ஒரு முறை கட்டணம் 110, பன்முறைக் கட்டணம் 160-ல் இருந்து 165 , மாதக் கட்டணம் 3,250-ல் இருந்து 3,255-ஆக உயர்கிறது. லோடு வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு 190, ஒரே நாளில் பன்முறை கட்டணம் 285 ல் இருந்து 290 ஆக உயர்வு, மாதக் கட்டணம் 5,685 ல் இருந்து 5,765 ஆக உயர்வு, பேருந்து ஒரு முறைக்கு 380-ல் இருந்து 385-ஆக உயர்வு, ஒரே நாளில் பன்முறை செல்ல 590-ல் இருந்து 595-ஆக உயர்வு, மாதந்திர கட்டணம் 11,370-ல் இருந்து 11,530-ஆக உயர்வு, 2 அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 610-ல் இருந்து 620-ஆக உயர்வு, மாதக் கட்டணம் 18,275 ல் இருந்து 18,530 ஆக அதிகரிக்கப்படும். சுங்கக் கட்டணம் நாளை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது.

MUST READ