
மதுரை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. வனிதா, “மதுரை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தப்படும். பயணிகளை அனுப்பி வைத்த டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘SK21’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
மதுரை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடக்கவில்லை. அதிகமாக எரிப்பொருட்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி விசாரணை மேற்கொள்வார். மதுரை அருகே ரயிலில் தீ விபத்து தொடர்பாக பொதுமக்கள் விரும்பினால் நேரில் வந்து தகவல் தெரிவிக்கலாம்.
யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 27) காலை நடைபெறும் விசாரணையில் தகவல் தெரிவிக்கலாம். தீ விபத்து தொடர்பான ஆவணங்கள், வீடியோ காட்சிகள் எது இருந்தாலும் நேரில் வந்து தரலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.