spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

-

- Advertisement -

 

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Photo: Minister Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார்.

we-r-hiring

ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் வரும் ஜூன் 8- ஆம் தேதி பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அதற்காக, வரும் ஜூன் 8- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 மணிக்கு கந்தநேரிக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டத்தை முடித்துக் கொண்டு விசாகப்பட்டினம் செல்ல உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழக பா.ஜ.க.வின் நிர்வாகிகளையும் அவர் நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ