உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இம்மாதம் 31ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி பெய்த கனமழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதுமடைந்த நிலையில் அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதனபடி மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், மறுமார்க்கத்தில் உதகையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.