
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 1,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!
கோவை மாவட்டம் பீளமேடு, சென்னை, திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வந்த யுடிஎஸ் நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டது. அதனை நம்பி 76,000 பேர் அந்த நிறுவனத்தில் முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் வாக்குறுதிப்படி, பணம் கொடுக்காமல் தமிழகம், கேரளாவில் சுமார் 1,300 கோடி ரூபாய் வரை மோசடி நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நிர்வாக இயக்குநர் ரமேஷ், இயக்குநர் கனகராஜ், மேலாளர் சுனில்குமார் ஆகியோர் மீது கடந்த 2019- ஆம் ஆண்டு பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிணையில் வந்த கவுதம் ரமேஷ், தலைமறைவானார். அவரை கேரள மாநில காவல்துறையினரும், கோவை மாவட்ட காவல்துறையினரும் தேடி வந்தனர்.
மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.