Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக இன்று (ஜூன் 10) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார்.

சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று (ஜூன் 10) பிற்பகல் கார் மூலம் சாலை மார்க்கமாக, சென்னை விமான நிலையம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனி விமானம் மூலம் சேலம் மாவட்டத்துக்கு புறப்படுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 04.00 மணியளவில் ஓமலூரில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், ஐந்து ரோடு சந்திப்பில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 10) மாலை 05.00 மணிக்கு நடைபெறும் சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். இன்றிரவு சேலத்திலேயே தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (ஜூன் 11) காலை 10.00 மணிக்கு சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளார்.

தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!

சேலம் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம், நேரு கலையரங்கம் உள்ளிட்டவற்றையும் திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்பூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்றத் திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

ஜூன் 12- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்கு நீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

MUST READ