Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

-

- Advertisement -

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இறுதி செய்யப்படும் என கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்…2026 தேர்தலுக்கு பின் ”பாஜகவின் கிளையாக மாறும் அதிமுக” – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி ஆனந்தனின்  94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, குமரி ஆனந்தனின் பேரனும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் ஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் செல்வப்பெருந்தகை, ”காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து கட்சியின் தேர்தல் கமிட்டியின் ஆய்வு, நாளையும் மேலிட கண்காணிப்பு குழுவின் ஆய்வு, வரும் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளதாக கூறினார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் விருப்பத் தொகுதிகள் இறுதி செய்யப்படும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, ” அதிமுக கூட்டணி அல்ல, பா.ஜ.க கூட்டணி என்றும் டெல்லி கூட்டணி என்றும் பதிலளித்த அவர், தங்களது கூட்டணி தமிழ்நாடு கூட்டணி என்றும் கூறினார்.

டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கின்ற ஒரு சித்தாந்த போர் என்று பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டு உரிமைகளை பறிக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் வரலாற்றை சிதைக்க வேண்டும் என்று நினைப்போடு பாஜக செயல்படுகிறது என்றார்.

மேலும், தமிழ்நாட்டு மக்களை தலை நிமிரச் செய்யும் கூட்டணி தங்களது தேசிய முற்போக்கு கூட்டணி என்றும் தமிழ்நாட்டை தலைகுனிய வைக்கும் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் அவர் விமர்சித்துள்ளாா்.

எடப்பாடி பழனிச்சாமி எத்தனை முறை டெல்லி போனாலும் தேர்தலுக்குப் பிறகு அது பாஜகவோடு இணைக்கப்படும் ஒரு கிளையாக தான் இருக்கும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட கிள்ளியூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சிலர் எழுப்பிய கருத்து குறித்த கேள்விக்கு, எங்கள் நிர்வாகிகள் கூட சில அமைச்சர்களின் தொகுதிகளை கேட்கிறார்கள். அதை கேட்க முடியுமா? அது முறையாகுமா? நாகரீகமா? என்று வினவி, விருப்பங்கள் தெரிவிக்கப்படுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

எத்தனை முனை போட்டிகள் வந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளாக வழங்கப்பட்ட நலத்திட்டங்களே பேசும் என அவர் தெரிவித்தார்.  தங்கள் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும்

எந்த மாயாஜாலம் செய்தாலும் மோடி மஸ்தான் வித்தை செய்தாலும் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 210 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.

புதுச்சேரி கூட்டணியில் எந்த விதமான சலசலப்பும் கிடையாது என்று விளக்கிய செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகளை புதுச்சேரியில் ஒதுக்க திமுக நிர்வாகிகள் ஒத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

புதுவையில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தேர்வு என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்றும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறைவேற்ற முயற்சி செய்வோம் என்றும் அவர் கூறினார்.

கூடுதல் இடங்களை தோழமைக் கட்சிகள் கேட்பதற்கு உரிமையும் கொடுப்பதற்கான மனம் முதலமைச்சருக்கு இருப்பதாகவும் பேசிய அவர், ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டு கேட்க வேண்டாம் என பிற கட்சிகளை வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்கு தற்பொழுது 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, 110 சட்டமன்ற தொகுதிகளில் நின்ற காங்கிரஸ், படிப்படியாக குறைந்து தற்போது 28 தொகுதிகளில் நிற்பதாகவும் காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்த இடங்களில் தான் பல கட்சியினர் போட்டியிட்டு வருவதாகவும் விவரித்து, சற்று வேதனையை வெளிப்படுத்தினார்.

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

MUST READ