Homeசெய்திகள்தமிழ்நாடுவேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

வேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

-

- Advertisement -

 

வேலு நாச்சியார், கட்டபொம்மனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களை வீரத்தில் எழுதிய முன்னோடிகள் என்று வீரமங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!

பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும்!”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ