Homeசெய்திகள்தமிழ்நாடு“பாஜகவின் கைப்பாவையாக மாறினார் விஜய்! ராகுல் காந்திக்குக் கிடைத்த வரலாற்றுப் பரிசு!” – திமுக சிறுபான்மை...

“பாஜகவின் கைப்பாவையாக மாறினார் விஜய்! ராகுல் காந்திக்குக் கிடைத்த வரலாற்றுப் பரிசு!” – திமுக சிறுபான்மை நலன் துணைத்தலைவர் அலிமல் புகாரி சாடல்!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள், பாஜகவுடனான பின்னணி தொடர்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சி சந்தித்துவரும் அரசியல் முட்டுக்கட்டைகள் குறித்து, ‘ திமுக சிறுபான்மை நலப் பிரிவு துணைத்தலைவரும் வழக்கறிஞருமான அலிமல் புகாரி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.“பாஜகவின் கைப்பாவையாக மாறினார் விஜய்! ராகுல் காந்திக்குக் கிடைத்த வரலாற்றுப் பரிசு!” – திமுக சிறுபான்மை நலன் துணைத்தலைவர் அலிமல் புகாரி சாடல்!

பாஜகவின் தயவில் இயங்கும் தவெக

கட்சித் தொடங்கிய குறுகிய காலத்திலேயே, ஒரு கவுன்சிலராகக்கூடப் பதவி வகிக்காத நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு (Y-Category) பாதுகாப்பு வழங்கியதையும், தேர்தல் ஆணையத்தின் மூலம் எளிதாக ‘விசில்’ சின்னம் மற்றும் கட்சியின் அங்கீகாரம் கிடைத் ததையும் அலிமல் புகாரி சுட்டிக்காட்டினார். இவை அனைத்துமே தவெக-விற்குப் பின்னால் உள்ள பாஜகவின் கரங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

we-r-hiring

மேலும், தவெக நிகழ்வின்போது 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் பிற அரசியல் தலைவர்களைப்போல் விஜய்யை முடக்காமல், பாஜகவின் முக்கியத் தலைவர்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவுக் குரல் கொடுத்தது தற்செயலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். கரூர் சம்பவம், 108 சீட் பேரப் புகார்கள் மற்றும் புசி ஆனந்த் மீதான நிதி முறைகேடு புகார்கள் எனப் பல வழக்குகளின் பிடி பாஜகவின் கையில் உள்ளதால், விஜய்யால் பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது என்று அலிமல் புகாரி தெரிவித்தார்.

திமுக கூட்டணியைப் பிரிக்கவே ‘பிரதமர் வேட்பாளர்’ பிம்பம்

விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக தவெகவினர் முன்னிறுத்துவது, அவரை உண்மையாகவே அரியணையில் அமர்த்துவதற்காக அல்ல; மாறாக, அது பாஜகவின் திட்டமிடப்பட்ட அரசியல் வியூகம் என நேர்காணலில் தெரிவிக்கப்பட்டது. திமுகவின் பலமாக விளங்கும் கூட்டணிக் கட்சிகளைத் தவெக மூலமாகப் பிரித்து, திமுகவை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதே பாஜகவின் முதன்மை இலக்காகும். தமிழ்நாட்டில் பாஜகவின் ஒரே எதிரி திமுகவும் அதன் சித்தாந்தமும்தான் எனக் குறிப்பிட்ட புகாரி, விஜய்யின் பிரபலத்தைப் பயன்படுத்தி வாக்குகளைப் பிரிப்பதும், தேர்தல் நெருங்கும்போது அவரைத் தன் வசப்படுத்துவதுமே பாஜகவின் மறைமுகத் திட்டம் என்றார்.“பாஜகவின் கைப்பாவையாக மாறினார் விஜய்! ராகுல் காந்திக்குக் கிடைத்த வரலாற்றுப் பரிசு!” – திமுக சிறுபான்மை நலன் துணைத்தலைவர் அலிமல் புகாரி சாடல்!

நடுத்தெருவில் நிற்கவைக்கப்படும் காங்கிரஸ்

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க வைக்க, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், தவெக தரப்பிலிருந்து எந்தவொரு நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை. கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தோழமைக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி தவெக கூட்டணியில் இணைக்க ராகுல் காந்தி பெருமுயற்சி எடுத்தபோதிலும், விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக தவெகவினர் அறிவித்து வருவதால், காங்கிரஸ் தனது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் இழந்து நிற்பதாக அலிமல் புகாரி சாடினார். தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸைத் தவெகவினர் கைவிடுவார்கள் என்றும், முதுகில் குத்தும் அரசியலுக்கு வரலாறு தகுந்த பாட புகட்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

பாயும் வழக்குகள்: அவிழும் முகமூடி

என்றாவது ஒருநாள் விஜய் பாஜகவை எதிர்த்துப் பேசத் துணிந்தால், அன்றைய தினமே கரூர் வழக்கு மற்றும் நிதி முறைகேடு புகார்கள் அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்த அலிமல் புகாரி, அன்றைய தினமே இக்கூட்டணியின் போலி முகமூடியும் உண்மை முகமும் அம்பலமாகும் எனக் கூறி தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் – காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்!

MUST READ