Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிச் சத்துணவில் தேங்காய் கீற்று வழங்க வேண்டும்!" — சட்டப்பேரவையில் கொ.நா.ம.தே.க உறுப்பினர் நித்தியானந்தன் கோரிக்கை!

பள்ளிச் சத்துணவில் தேங்காய் கீற்று வழங்க வேண்டும்!” — சட்டப்பேரவையில் கொ.நா.ம.தே.க உறுப்பினர் நித்தியானந்தன் கோரிக்கை!

-

- Advertisement -

பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவில் தேங்காய் கீற்று வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.நா.ம.தே.க) சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் பேரவையில் வலியுறுத்தினார்.பள்ளிச் சத்துணவில் தேங்காய் கீற்று வழங்க வேண்டும்!" — சட்டப்பேரவையில் கொ.நா.ம.தே.க உறுப்பினர் நித்தியானந்தன் கோரிக்கை!

சட்டப்பேரவை விவாதத்தின் போது தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நீரா பான விற்பனை குறித்து நித்தியானந்தன் எம்.எல்.ஏ பேசியதாவது:

we-r-hiring

பேரவையில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
தேங்காய் கீற்று & எண்ணெய்:
ஆசியாவிலேயே அதிக தேங்காய் நாரைப் உற்பத்தி செய்யும் பகுதியாகப் பொள்ளாச்சி திகழ்கிறது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் பள்ளிச் சத்துணவில் தினமும் தேங்காய் கீற்று வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய அரசு முன்வர வேண்டும்.”

நீரா பான விற்பனை:
“தென்னையில் இருந்து உற்பத்தி செய்யப்படும், சர்க்கரை அளவு மிகக் குறைந்த மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீரா பானத்தை அரசு மூலமாகத் தடையின்றி விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் முன்வைத்த கொ.நா.ம.தே.க உறுப்பினரின் இந்தப் பேச்சு, விவசாய அமைப்புகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் – காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்!

MUST READ