Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டமன்றத்தில் மக்களுக்கான குரல்! — சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் எக்ஸ் (X) தளத்தில் பாராட்டு!

சட்டமன்றத்தில் மக்களுக்கான குரல்! — சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் எக்ஸ் (X) தளத்தில் பாராட்டு!

-

- Advertisement -

சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைத் துல்லியமான தகவல்களுடன் முன்வைத்து வரும் பாமக சட்டமன்றக் குழுத் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணிக்கு, மக்கள் நீதி மையத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெஞ்சார பாராட்டு தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில் மக்களுக்கான குரல்! — சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் எக்ஸ் (X) தளத்தில் பாராட்டு!

கமலாஹாசன் தனது எக்ஸ் (X) பதிவில் குறிப்பிட்டது:
சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் குறுகிய நேரத்தையும் மிகச் சரியாகவும், துல்லியமான புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வரும் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்களின் பணி பாராட்டுக்குரியது.

we-r-hiring

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகச் செயல்பட்டு வரும் சௌமியா அன்புமணி, நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொகுதிப் பிரச்சினைகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு துல்லியமான தகவல்களுடன் உரையாற்றிப் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அவரது இந்தச் சிறந்த சட்டமன்றப் பணியைப் பாராட்டி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவு, தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

“பெண்களின் உரிமையை விற்கும் அரசியல்வாதிகள்! உலகை மிரள வைக்கும் இந்தியப் பொருளாதாரம்!” – ரங்கராஜ் பாண்டே ஆவேசப் பேட்டி!

MUST READ