Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக...

தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!

-

- Advertisement -

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 முக்கிய முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றிலிருந்து (செப்டம்பர் 1, 2026) தடை அமலுக்கு வந்துள்ளது. கோயில்களின் அமைதியைப் பேணவும், பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!

தடை விதிக்கப்பட்டுள்ள முக்கியத் திருக்கோயில்கள்
திருத்தனி, திருப்பரங்குன்றம், வடபழனி, குன்றத்தூர், வள்ளக்கோட்டை ஆகிய முருகன் கோயில்கள், காஞ்சிபுரம், பெரியபாளையம், திருவேற்காடு, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 52 பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் செல்போன் தடை வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

ரூ.5 கட்டணத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம்
பக்தர்களின் வசதிக்காகக் கோயில் வளாகத்திலேயே செல்போன்களைப் பாதுகாப்பாக ஒப்படைக்க சிறப்புப் பாதுகாப்புப் பெட்டக (Locker) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  பக்தர்கள் தங்களது செல்போன்களை அங்கு ஒப்படைத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது அல்லது டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சாமி தரிசனம் முடிந்த பிறகு, அந்த டோக்கனைக் காண்பித்துத் தங்களது செல்போன்களைப் திரும்பப் பெற்றுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 52 முக்கியக் கோயில்களில் இன்று முதல் செல்போனுக்குத் தடை: ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்புப் பெட்டக வசதி!

அமைச்சர் ரமேஷ் விளக்கம்
இந்தக் கட்டுப்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, “நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோக்கள் பதிவு செய்வதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை.

கேமரா வசதி கொண்ட செல்போன்களை பக்தர்கள் முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண (Feature phones) கைப்பேசிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது. அவசர காலத் தேவைகளுக்குக் கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் உதவிகள் செய்யப்படும்.” கோயில்களில் ஆரோக்கியமான மற்றும் ஆன்மிகச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் விஜய் ‘ரோடு ஷோ’: மக்கள் வெள்ளத்தில் மிதந்த மேச்சேரி!

MUST READ