மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவரின் தோளில் கையைப் போட்டபடி புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா விவசாயிகளின் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையின் மதகுகளைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அணைப் பகுதியில் திரண்டிருந்த விவசாயிகளிடம் நேரில் சென்று கலந்துரையாடினார்.

அப்போது, முதிய விவசாயி ஒருவர் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தபோது, முதலமைச்சர் விஜய் அவரது தோளில் அன்போடு கைபோட்டு, நலம் விசாரித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
“விவசாயிகளின் நலனே இந்த அரசின் முதன்மை இலக்கு; உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளலாம்,” என முதலமைச்சர் உறுதியளித்தார்.
எளிமையான முறையில் விவசாயியிடம் அன்பைப் பகிர்ந்துகொண்ட முதலமைச்சர் விஜய்யின் இந்த நிழற்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சேலத்தில் உற்சாக வரவேற்பு: மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்
