Homeசெய்திகள்தமிழ்நாடுகடந்த ஆட்சியில் பட்டாசு ஆலை உரிமத்திற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம்! பேரவையில் அமைச்சர் ச....

கடந்த ஆட்சியில் பட்டாசு ஆலை உரிமத்திற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம்! பேரவையில் அமைச்சர் ச. கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு!

-

- Advertisement -

கடந்த ஆட்சிக் காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் (License) வழங்குவதில் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.கடந்த ஆட்சியில் பட்டாசு ஆலை உரிமத்திற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம்! பேரவையில் அமைச்சர் ச. கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலை உரிமங்கள் குறித்த விவாதத்தின் போது அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:

we-r-hiring

அமைச்சர் கீர்த்தனாவின் உரை விவரம்:
லஞ்சப் புகார் ஆதாரங்கள்:
கடந்த ஆட்சிக் காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கான புதிய உரிமம் பெறவும், உரிமங்களைப் புதுப்பிக்கவும் ரூ.5 லட்சம் வரை லஞ்சமாகக் கைமாறியுள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

த.வெ.க அரசுக்கு உறியாளர்கள் பாராட்டு:
“தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு, பட்டாசு ஆலைகளுக்கான உரிம நடைமுறைகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் மாற்றப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள் இல்லாமல் விரைவாக உரிமங்கள் வழங்கப்படுவதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் த.வெ.க அரசைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.”

பட்டாசு ஆலைகளின் தலைநகரான சிவகாசியைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் இந்த குற்றச்சாட்டு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரிடையே பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

பள்ளிச் சத்துணவில் தேங்காய் கீற்று வழங்க வேண்டும்!” — சட்டப்பேரவையில் கொ.நா.ம.தே.க உறுப்பினர் நித்தியானந்தன் கோரிக்கை!

MUST READ