Homeசெய்திகள்தமிழ்நாடுஓணம் மற்றும் மிலாது நபி திருநாள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

ஓணம் மற்றும் மிலாது நபி திருநாள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

-

- Advertisement -

கேரள மக்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த மிலாது நபி திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அன்பும் பொலிவும் பெருகட்டும் – ஓணம் வாழ்த்து!

“உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அன்பும் மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!”

நல்லிணக்கம் தழைக்கட்டும் – மிலாது நபி வாழ்த்து!

“இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!

இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!”

இன்னும் E-KYC பண்ணலையா? டோன்ட் வர்ரி.. ஆகஸ்ட் 29-ல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!

MUST READ