Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகள்: சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் இருதரப்புப் பேச்சுவார்த்தை!

தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகள்: சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் இருதரப்புப் பேச்சுவார்த்தை!

-

- Advertisement -

தமிழ்நாடு–சிங்கப்பூர் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான அரசுக் குழுவினருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

we-r-hiring

இந்தச் சந்திப்பின் மூலம் தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், இரு தரப்புகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பங்கேற்றவர்கள்

இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ச. விஜயகுமார், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் அரசுக் குழுவினர் பங்கேற்பு

சிங்கப்பூர் அரசு சார்பில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் வில்லியம் சிக், சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஜெர்மைன் லாய் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முதுநிலை இயக்குநர் பிரான்சிஸ் சோங், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மண்டல இயக்குநர் ஜெஸ்ஸி என்ஜி, சிங்கப்பூர் உயர் ஆணையத்தின் முதல் செயலாளர் (பொருளாதாரம்) வெரோனிக் பான், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் கீஃப் லோ உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் தமிழ்நாடு–சிங்கப்பூர் பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஆகியவை இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க CM – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை! விலைவாசி உயர்வை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என X தளத்தில் பதிவு

MUST READ