Homeசெய்திகள்தமிழ்நாடுஉயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் – முதலமைச்சர் விஜய் மரியாதை

உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் – முதலமைச்சர் விஜய் மரியாதை

-

- Advertisement -

நாட்டின் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் பாதுகாக்கும் உயரிய பணியில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் – முதலமைச்சர் விஜய் மரியாதை

காவலர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

we-r-hiring

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உன்னதக் கடமையை ஆற்றும்போது உயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காலநேரம் கருதாமல் அயராது உழைத்து, நாட்டின் பாதுகாப்பு அரணாகத் திகழும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளைப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூகத்தில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவற்றில் காவல்துறையினரின் பங்களிப்பு முக்கியமானது.

கடமையின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் சேவைக்கு மரியாதை செலுத்துவோம் என்ற கருத்தை முதலமைச்சர் விஜய் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தவெக அரசு படிப்படியாக ஊழலை ஒழிக்கிறது – வைகோ கருத்து

MUST READ