spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கும் விஜய்

ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கும் விஜய்

-

- Advertisement -

ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கும் விஜய்

10, 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 17 ஆம் தேதி நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவளுக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது! “தளபதி விஜய்” அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று “அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள (R.K Convention Centre-ல்) 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பணிரெண்டாம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “தளபதி விஜய்” அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

MUST READ