spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் விழாவைக் கொண்டாடுங்கள்"- தமிழக காவல்துறை வேண்டுகோள்!

“சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் விழாவைக் கொண்டாடுங்கள்”- தமிழக காவல்துறை வேண்டுகோள்!

-

- Advertisement -

 

"சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் விழாவைக் கொண்டாடுங்கள்"- தமிழக காவல்துறை வேண்டுகோள்!
Video Crop Image

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக காவல்துறை.

we-r-hiring

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டு தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகளை நிறுவக் கூடாது.

விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் 24 மணி நேரமும் விழா ஏற்பாட்டாளர்கள் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும், பட்டாசு வெடிக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மத துவேச முழக்கங்களை எழுப்பக் கூடாது.

சாகச பயணத்தின் போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

விநாயகர் சதுர்த்தி தொடர்பான தகவல்களுக்கு 044- 28447701 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு இடையூறு, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் விழாவைக் கொண்டாட வேண்டுகோள் விடுக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ