spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்"- தமிழக அரசு அரசாணை!

“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!

-

- Advertisement -

 

we-r-hiring

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி வரும் செப்டம்பர் 17- ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 18- ஆம் தேதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில், “பல்வேறு கோயில் தலைவர்களின் அறிக்கையின் படி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் செப்டம்பர் 18- ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள் பறிமுதல்

இதனை பரிசீலித்த தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது விடுமுறையை மாற்ற முடிவுச் செய்துள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்திக்கான பொதுவிடுமுறையை செப்டம்பர் 17- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 18- ஆம் தேதிக்கு மாற்ற முடிவுச் செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ