Homeசெய்திகள்க்ரைம்திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

-

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த பேரன், குடிபோதையில் தாத்தாவை வெட்டிக்கொலை செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆச்சிமுத்து (78) என்பவர் வீட்டில் இருக்கும்போது, மகனுடைய பிள்ளை பேரன், மருதை (25) நள்ளிரவில் குடிபோதையில் தாத்தாவிடம் தகராறு செய்து, அருவாளால் வெட்டியதில், கழுத்து மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த ஆச்சிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் போது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், மேற்படி மருதையின் சித்தப்பா மருதுபாண்டி என்பவருடைய மகளுக்கு, கடந்த வாரம் திண்டுக்கல் நல்லாம்பட்டியில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண பத்திரிக்கையில் தனது குடும்பத்தாரின் பெயர்களை பத்திரிகையில் போடாத காரணத்தினால், ஆத்திரத்தில் நேற்று நள்ளிரவில் சித்தப்பா மருதுபாண்டி வீட்டுக்கு சென்று, மருதை தகராறு செய்துள்ளார்.

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

இதுகுறித்து, தாத்தா ஆச்சிமுத்து பேரன் மருதையை கண்டிக்கும் போது, ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குடிபோதையில் இருந்த மருதை தாத்தாவை அருவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஒடிவிட்டார். இதுகுறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தாத்தாவை வெட்டிய பேரன் மருதை தேடி வருகின்றனர்.

MUST READ