spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

-

- Advertisement -

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

சென்னை கொருக்குப்பேட்டை டி.கே.கார்டன் பகுதியில் கொருக்குப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

we-r-hiring

சோதனையில் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் போலீசாரின் கேள்விகளுக்கும் இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் காசிமேடு பகுதியில் வசித்து வரும் லாரன்ஸ் (33) என்பது தெரிவந்தது. அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

வடசென்னையில் வெவ்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்ட மூன்று வாகனங்களை லாரன்ஸ்மிடருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவன் மீது இருசக்கர வாகனம் திருடிய 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

MUST READ