spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்துணை முதல்வர் தொடர்பு கொண்ட பிறகுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம் - கபடி வீரர்கள் பேட்டி

துணை முதல்வர் தொடர்பு கொண்ட பிறகுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம் – கபடி வீரர்கள் பேட்டி

-

- Advertisement -

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாப் காவல் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான் பாதுகாப்பாக உணர்ந்தோம் என பாஞ்சாப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பிய கபடி வீராங்கனைகள் பேட்டி.

துணை முதல்வர் தொடர்பு கொண்ட பிறகுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம் - கபடி வீரர்கள் பேட்டிபஞ்சாப் மாநிலம் பதிட்டா என்ற இடத்தில் பல்கலைக்கழகங்கள் இடையிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழக அணியினர் கலந்து கொண்டனர். இதில் கடந்த 24 ஆம் தேதி காலை நடைபெற்ற தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான காலிறுதி போட்டியில் விளையாடினர்.

we-r-hiring

துணை முதல்வர் தொடர்பு கொண்ட பிறகுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம் - கபடி வீரர்கள் பேட்டிஇதில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழகத்தை சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகளை தாக்குதல் நடத்தும் முயற்சியோடு தர்மங்கா பல்கலைக்கழக மாணவிகள் ஆக்ரோஷத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பொழுது அன்னை தெரேசா பல்கலைக்கழக மாணவிகள் மீது கடுமையாக தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் தாக்கியுள்ளனர். அப்பொழுது இரு தரப்புக்கும் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டியிலிருந்து வெளியேறி சென்னை திரும்பிய மாணவிகள், செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பாதிக்கப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ, போட்டியை நடத்தும் குழுவினர் தொடர்ந்து ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொண்டதாகவும், தங்களை எதிர்தரப்பு அணியினர் தாக்கும் பொழுது யாரும் தடுக்கவில்லை என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தலையிட்ட பின் தான் நிம்மதியடைந்தோம். அங்கிருந்து டெல்லி பாதுகாப்பாக வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலையரசி, பிரச்சனை நடைபெற்ற பின் என்ன செய்வது என தெரியாமல் இருந்தோம். துணை முதலமைச்சர் காவல் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான் பாதுகாப்பாக உணர்ந்தோம். ஒவ்வொரு முறையும் வடமாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் பொழுது தமிழகத்துக்கு எதிராகவே போட்டியை நடத்தும் அமைப்புகள் செயல்படுவதாகவும், தமிழக வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழக உடற்கல்வி கலையரசி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ