spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் பலி

-

- Advertisement -

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலி.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் இயங்கிவருகிறது. இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இன்று காலை, வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, மூலப்பொருள் தயாரிக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வால் திடீரென ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகியது. தகவல் அறிந்ததும் ஆத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

we-r-hiring

2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவனைியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!

MUST READ