திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஜூன் 27 அன்று லோகேஸ்வரி என்பவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவா் மறுவீட்டுக்காக தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். திருமணமான நான்கு நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா் பொன்னோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்த புகாாின் அடிப்படையில் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இது வரதட்சணை கொடுமையால் நடந்த தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 7 நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை…இன்று அதிரடியாய் உயர்ந்த தங்கம்!
