Homeசெய்திகள்க்ரைம்தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை - கணவர் கைது!

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

-

- Advertisement -

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில், பிரபல யூடியூபர் வைஷ்ணவி (19) என்பவர் அவரது கணவர் ஹரிபாபு (26) என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை - கணவர் கைது!

​வைஷ்ணவியும் ஹரிபாபுவும் காதலித்து வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. வைஷ்ணவி ‘Vaishu Amma’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அவருக்கு 50,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் (Subscribers) உள்ளனர். திருமணத்தின் போது பெண் வீட்டார் வரதட்சணை வழங்கிய போதிலும், திருமணத்திற்குப் பிறகு ஹரிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

​வைஷ்ணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 17, 2026) அதிகாலை, கூடுதல் வரதட்சணை தொடர்பாக தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிபாபு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வைஷ்ணவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வைஷ்ணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சம்பவத்தன்று காலை ஹரிபாபு வீட்டில் இருந்து தப்பிச் சென்றதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வைஷ்ணவி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த கோருட்லா காவல்துறையினர், வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

​தலைமறைவாக இருந்த ஹரிபாபுவை தனிப்படை அமைத்துத் தேடி வந்த காவல்துறையினர், நேற்று (மார்ச் 18) அவரைக் கைது செய்தனர். அவர் மீது கொலை மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்ட பின்னரும், ஒரு பெண் வரதட்சணைக்காகக் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வைஷ்ணவியின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

MUST READ