கோபி அருகே கொடிவேரி அணைக்கு ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது தற்போது முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு கடந்த ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்துள்ளனர். பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணையானது சுமார் 15 அடி உயரத்தில் அருவிபோல் கசியும் நீரின் தோற்றம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த இடம் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்பும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள், அணையின் கீழ் பகுதியில் கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் உணவுகளை சாப்பிடுவதும், மேல் பகுதியில் அமைந்த சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்வது வழக்கமாகியுள்ளது. மிகக் குறைந்த செலவில் – ஒரு நபருக்கு ரூ.5 கட்டணத்தில் – இனிமையான ஒரு நாள் பயணத்தை அனுபவிக்க முடிவதாலேயே, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் கொடிவேரி அணையைத் தேடி வந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து குளித்தும், பூங்காவில் சிறிது நேரம் உற்சாகமாக கழித்தும் மகிழ்ந்தனர்.
ஸ்டாலினோட பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!