மருத்துவ பணியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் சாா்பில் மருத்துவ வாாியத் தோ்வு பணியாளா்கள் மூலம் தோ்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையகரத்தில் 55 சித்த மருத்துவ உதவியாளா் அலுவலா்கள், இரண்டு உதவி மருத்துவா்கள், ஒரு யுனானி மருத்துவா் அலுவலா் என்று 53 பேருக்கு பணியாளா்களை முதல்வா் நியமித்தாா்.
மேலும், உதவி மருத்துவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளா் மூலம் தோ்வு செய்யப்பட்ட 57 சுருக்கெழுத்தா், தட்டச்சா் நிலை 3 ஆகிய பணிகளுக்கும் தோ்வு செய்யப்பட்டவா்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தற்போது, காவல் துறைக்கு உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் படி 10+ 5+ 10+ ஆண்டுகள் காவலா்களுக்கான நிலை உயா்த்துதல் மாற்றி 10+ 3+ 10+ என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை மாநகர காவல் நிலையத்திலிருந்து 9 முதல் நிலை காவல்களுக்கும், மற்ற காவல் நிலையத்திலிருந்து 12 முதல் நிலை காவல்களுக்கும், மொத்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை செயல் அலுவலா், உள்துறை செயலாளா் மற்றும் காவல் துறை டிஜிபி உள்ளிட்ட பல்வேறு உயா் அதிகாாிகள் கலந்துக் கொண்டனா்.
சென்னையில் ரூ.207 மதிப்பீட்டில் புதிய மின்சார பேருந்து சேவை…முதல்வர் திறந்து வைத்தாா்