சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் திறந்து வைத்தாா். வியாசர்பாடி பணிமனையில் இருந்து 11 வழிதடங்களில் 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது .சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பேருந்துகளின் எரிபொருள் இயக்கச் செலவுகளை குறைக்கும் வண்ணம் சென்னையில் மின்சார பேருந்து சேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடி பணிமனையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளாா்.
முதற்கட்டமாக சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அதில் பயனம் மேற்கொண்டாா்.

மேலும் வியாசர்பாடி பணிமனையில் பணியாளர்களுக்கு ஓய்வறை, பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்டவை 47.50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதனையும் திறந்து வைத்தாா்.
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் சார்ஜிங் பாயின்ட்கள் அமைத்து மின்சார பேருந்துகள் இயக்கபட உள்ளது.
மின்சார பேருந்துகள் பொருத்தமட்டில் 240 கி. வாட் சார்ஜ் செய்தால் 45 நிமிடங்களில் 2 பேருந்துகளுக்கு முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். 200 கிமீ வரை பயணம் செய்ய முடியும் வகையில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தள பேருந்துகளில் இருப்பது போல மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கான சாய்தள வசதி , தனி இருக்கை , சிசிடிவி கண்காணிப்பு , ஜிபிஎஸ் உதவியோடு அடுத்த பேருந்து நிறுத்தத்தை தெரிந்து கொள்ளும் வசதி , வேக தடைகளுக்கு ஏற்வாறு பேருந்து உயரத்தை உயர்த்தும் வசதி , சீட் பெல்ட் , சார்ஜ் மற்றும் அவசரக்கால பொத்தான்கள் , ஓட்டுனர் எளிதில் பேருந்துகளை இயக்க பல்வேறு வசதிகள் இந்த மின்சார பேருந்துகளிலும் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 45 வழித்தடங்களில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருந்தாலும் இன்று வியாசர்பாடி பணிமனையில் இருந்து 11 வழிதடங்களில் 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.