சென்னையில் ஆகஸ்டு 17- ஆம் தேதி நடைபெறும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியின் பிறந்தநாள் விழாவிற்கு பிரபல கேரள ராப் பாடகர் வேடனுக்கு அழைப்பு.
திருமாவளவன் பிறந்தநாள் விழா மேடையில் பிரபல பாடகர் வேடன் தனது இசை நிகழ்ச்சியை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ராப் பாடகர் வேடனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.

சென்னையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17- ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பிறந்தநாள் விழாவை விசிகவினர் நடத்த உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய பிறந்தநாள் விழாவில் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடனை விசிகவினர் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு நேரில் சந்தித்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பாடகர் வேடனும் விசிகவின் அழைப்பை ஏற்று வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது ராப் பாடல்களை பாட இருக்கிறார் வேடன்.
சமீபத்தில் சுயாதீன பாடகர் வேடனை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார். சர்ச்சைகளுக்குப் பிறகு பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த வேடன் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு