Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ரீமால் புயல்

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது ரீமால் புயல்

-

நாளை மறுநாள் வங்கக்கடலில் ரீமால் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை மறுநாள் காலை புயலாக வலுப்பெறுகிறது; காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்காக நகர்ந்து நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புயலாக வலுப்பெற்ற பின் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கிச் செல்லும்.

வரும் 26ஆம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்று மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓமன் நாடு பரிந்துரைப்படி இப்புயலுக்கு ‘ரீமால்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

MUST READ