Homeசெய்திகள்தமிழ்நாடு"இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!" - மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ்...

“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!

-

- Advertisement -

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி ‘வந்தே மாதரம்’ பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள விசிக முன்னாள் எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ், மாநில அரசின் மெத்தனப் போக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!" - மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!

we-r-hiring

“சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என அரசு சொல்லியிருக்க வேண்டும்!”
செய்தியாளர்களிடம் பேசிய விசிக முன்னாள் எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் மரபுகள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

“இன்னும் என்னென்ன கொடுமைகளைத் தமிழ்நாடு பார்க்கப் போகிறதோ தெரியவில்லை…
கடந்த அரசைப் போல தொடக்கத்திலேயே உங்களோடு இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என இந்த அரசு சொல்லி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.” என ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளாா்.

மாநில அரசுக்கு மறைமுகக் கண்டனம்
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் அனைத்திலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலுடன் தான் விழாக்கள் தொடங்கப்பட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்ட அரசாங்க மரபாகும். ஆனால், ஆளுநர் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்,

  • வந்தே மாதரம்
  • தேசியகீதம்
  • தமிழ்த்தாய் வாழ்த்து என வரிசை மாற்றப்பட்டுத் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடமே தரப்பட்டது.

ஆளுநர் மாளிகையின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தொடக்கத்திலேயே தவெக அரசு தீர்க்கமாகக் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆளுநர் விவகாரத்தில் அரசு காட்டும் மெத்தனப் போக்கே இதுபோன்ற தொடர் மரபு மீறல்களுக்கு வழிவகுக்கிறது என்றும் ஆளூர் ஷாநவாஸ் தனது பேச்சின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடிக்கும் அரசியல் எதிர்ப்புகள்
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ. சுந்தரனாரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், அதே பாடலுக்கு முதலிடம் மறுக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே பல்வேறு நிர்வாக மோதல்கள் நிலவி வரும் சூழலில், விசிக முன்னாள் எம்.எல்.ஏ.,வின் இந்த காரசாரமான கருத்து, ஆளுநருக்கு எதிராகவும் மாநில அரசின் அணுகுமுறைக்கு எதிராகவும் கூட்டணிக் கட்சிகளுக்குள் இருக்கும் கொந்தளிப்பை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: சர்ச்சையை கிளப்பிய ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கம்!

MUST READ