Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு தான் பதில் சொன்னாரு!" - சர்க்காரியா கமிஷன் குறித்து...

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு தான் பதில் சொன்னாரு!” – சர்க்காரியா கமிஷன் குறித்து பேரவையில் எ.வ.வேலு காரசாரம்!

-

- Advertisement -

சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “1972-ல் சர்க்காரியா கமிஷனில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அளித்த சாட்சியத்தைப் போல முதலமைச்சரின் பேச்சும் அமைந்துள்ளது என எ.வ.வேலு காரசாரமாக விமர்சித்துள்ளார்.பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு தான் பதில் சொன்னாரு!" - சர்க்காரியா கமிஷன் குறித்து பேரவையில் எ.வ.வேலு காரசாரம்!

சர்க்காரியா கமிஷனில் நடந்தது என்ன?  சட்டமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாகப் பேசிய திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு, “1972-ல் சர்க்காரியா கமிஷன் விசாரணை நடந்தபோது, அப்போதைய கமிஷன் முன் ஆஜரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்றே பதிலளித்தார்” எனக் குறிப்பிட்டார்.

we-r-hiring

தொடர்ந்து பேசிய அவர், “அப்போது நடந்த சம்பவத்தை ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்குக்கு தான் பதில் சொன்னாரு’ என்று பழமொழியாகச் சொல்வார்கள்.

அதுபோலத் தான் சர்க்காரியா கமிஷனில் எம்.ஜி.ஆரின் வாக்குமூலமும் அமைந்திருந்தது.

இறுதியில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சர்க்காரியா கமிஷனே கூறிவிட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு

வரலாற்று ரீதியான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

நீதிமன்றத்தால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற அறிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பேசிய முதலமைச்சரின் உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

திமுக சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த பழைய வரலாற்றுச் சம்பவத்தின் ஒப்பீடு, சட்டப்பேரவையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

MUST READ