Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் விஜய்க்காக கிருஷ்ணகிரியில் இளைஞர் தற்கொலை முயற்சி

நடிகர் விஜய்க்காக கிருஷ்ணகிரியில் இளைஞர் தற்கொலை முயற்சி

-

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிடுவதில் வெற்றி பெறுவாரா அல்லது தோற்றுவிடுவாரோ என்ற கடும் மன உளைச்சலில் இருந்த இளைஞர் ஒருவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான இளைஞர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் மற்றும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மீது அதிக பற்று கொண்டவர் என்று கூறப்படுகிறது.  தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் உலாவரும் கருத்துக்களையும், அரசியல் சூழல்களையும் கவனித்து வந்த அந்த இளைஞர், விஜய் தேர்தலில் தோற்றுவிடுவாரோ என்று அச்சமடைந்துள்ளார்.

we-r-hiring

இந்த அச்சமும், தீவிர மன அழுத்தமும் காரணமாக, நேற்று இரவு அவர் தனது கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் வரும் கருத்துக்களை நம்பி, நிஜ வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவுக்கு இவருடைய ‘விவேகம்’ இருந்திருக்கிறது. அந்த இளைஞரின் செயலால் இப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க சிரமப்படுகிறார்கள். அரசியலை ரசிக்கலாம், ஆதரவு தெரிவிக்கலாம், ஆனால் அதுவே ஒருவரின் உயிரை எடுக்கும் அளவுக்கு இருப்பது கூடாது.

அரசியல் மேடையில் இருப்பவர்கள் வெற்றியைச் சந்திப்பார்கள், தோல்வியையும் சந்திப்பார்கள். அதுதான் அரசியல்! ரசனை என்பது ரசிப்பதோடு நின்றுவிட வேண்டும்; அதுவே ஆரோக்கியமானது!

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிரமான அரசியல் ஈடுபாடு மற்றும் ரசிகர் மோகம் காரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

MUST READ