spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

-

- Advertisement -

 

கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

we-r-hiring

துபாயில் அண்மையில் பெய்த கனமழையால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு…. காரணம் இதுதானா?

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், இணைய சேவை இல்லாததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட சிரமம் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக, ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகவும், இயல்பு நிலைக்கும் திரும்பவும் மேலும் சில தினங்கள் ஆகும் என்பதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

MUST READ