Homeசெய்திகள்உலகம்ஈரான் போர்: அமெரிக்காவின் வியூக மாற்றம்; தர்மசங்கடத்தில் சிக்கிய டிரம்ப் - சர்வதேச அரசியல் களத்தில்...

ஈரான் போர்: அமெரிக்காவின் வியூக மாற்றம்; தர்மசங்கடத்தில் சிக்கிய டிரம்ப் – சர்வதேச அரசியல் களத்தில் ஒரு டீகோட்

-

- Advertisement -

ஈரான் உடனான மோதலில் அமெரிக்கா தனது இலக்குகளை மாற்றியமைத்துள்ளது, இது உலக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட போர், தற்போது ஹார்முஸ் நீரிணைப் போக்குவரத்தை மீட்டெடுக்கும் ஒரு பேரமாகச் சுருங்கியுள்ளது. இந்த மாற்றம் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதாரத் தோல்வி பயத்தின் பின்னடைவே என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

we-r-hiring

டிரம்பின் தர்மசங்கடம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி, வணிகக் கப்பல் போக்குவரத்தை மீட்பதை முதன்மை இலக்காக மாற்றிக் கொண்டுள்ளார். இதற்குப் பின்னால் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளே முக்கியக் காரணம்.

அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போரினால் ஏற்படும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை தனது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என டிரம்ப் கவலை கொள்கிறார். போர் முடிவுக்கு வராவிட்டால், அது தனது அரசியல் செல்வாக்கைக் கடுமையாகச் சரிக்கும் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

ஈரானின் ‘ஹாட்பால் டாக்டிக்ஸ்’ (Hardball Tactics)

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஈரான், ‘ஹாட்பால் டாக்டிக்ஸ்’ எனும் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. அதாவது, அமெரிக்கா போரிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவசரத்தை உணர்ந்து, தனது கோரிக்கைகளை மிகவும் கடுமையாக்கியுள்ளது.

ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்:

  • அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடு செய்ய வேண்டும்.

  • ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்க வேண்டும்.

  • வலைகுடா நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும்.

  • பொருளாதாரத் தடைகளை நீக்கி, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

இது டிரம்ப் நிர்வாகத்திற்கு உள்நாட்டு அரசியல், சர்வதேச ராஜதந்திரம் மற்றும் ராணுவ வியூகம் என மூன்றிலும் பெரும் நெருக்கடியை (Triple Dilemma) ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் வியூக வெற்றி

அணுசக்தி ஒப்பந்தம் கைவிடப்பட்டால், ஈரான் தனது யுரேனியச் செரிவூட்டல் மற்றும் அணு உலைத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இது ஈரானுக்கு வழங்கும். உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், ஈரான் மேற்கத்திய நாடுகளைத் தொடர்ந்து மிரட்டும் பொருளாதார பலத்தைப் பெற்றுள்ளது.

மாறிவரும் வலைகுடா நாடுகளின் நிலைப்பாடு

ஈரான் போருக்கு முன்பு வரை அமெரிக்காவையே நம்பியிருந்த வலைகுடா நாடுகளான சவுதி அரேபியாவும், அமீரகமும் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளால் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த அவை, வாஷிங்டனைத் தாண்டி ஈரானுடன் நேரடியாகப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முயற்சி செய்து வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், அணுசக்தியை முடக்குவோம் என்று தொடங்கிய போர், இறுதியில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ பலவீனங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணையின் சாவி ஈரானிடமே இருப்பதை இந்தச் சூழல் உறுதி செய்துள்ளது.

மதுரையில் நற்பணிமன்றம்… அதிகாரத்தை நோக்கிய நகர்வு: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் திரிஷாவின் ‘திரைமறைவு’ பிரவேசம்!

MUST READ