Homeசெய்திகள்உலகம்வரலாற்றில் புதிய திருப்பம் : உலக அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா..

வரலாற்றில் புதிய திருப்பம் : உலக அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா..

-

- Advertisement -

Historic Turning Point: US, Russia, and China Hold Talks for Global Peace​உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அணு ஆயுதங்களை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். வரும் 19ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதி

ன் ஆகியோர் சந்தித்து இதுகுறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

​’ஸ்டார்ட்’ (START) ஒப்பந்தமும் தற்போதைய நிலையும்

​உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த 2010ஆம் ஆண்டில் தங்களுக்கு இடையே ‘ஸ்டார்ட்’ (START) என்ற பெயரில் ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தங்கள்வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,550-க்கு மிகாமலும், அவற்றை ஏந்திச் செல்லும் ஏவுகனைகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை 800-க்குள் வைத்திருக்கவும் ஒப்புக்கொண்டன. மேலும், பரஸ்பரம் மற்ற நாடுகளின் அணு ஆயுதத் தளங்களை ஆய்வு செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்திருந்தது.

​ஆனால், இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானதால், தற்போது ஆபத்தான அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான வழி இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

​சீனாவின் பங்களிப்பும் உச்சி மாநாட்டின் முக்கியத்துவமும்

​அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையாக சீனாவும் தற்போது பெருமளவில் அணு ஆயுதங்களைக் குவித்து வரும் சூழலில், அந்த நாடுகளையும் சேர்த்து புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் குறித்துப் பேசுவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும். மேம்படுத்தப்பட்ட நவீனமான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், உலக அமைதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாநாடாக இது சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை மீறி ஈரான் வசமிருக்கும் அதிநவீன ஆயுதங்கள்: உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்கள்!

MUST READ