spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

-

- Advertisement -

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கம்

இந்தியரின் விசா-ஆன்-அரைவல் கொள்கை விரிவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாற்றும் இந்தியர்கள் உயிருக்கு உத்ரவாதம் அளிக்கும் வகையில் அவர்கள் நலன் கருதி புதிய இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பல இந்திய குடும்பத்தினர் பயன் பெறுவர்.

we-r-hiring

இந்திய தூதரக தகவலின்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3.50 மில்லியன் பேர் வசிக்கின்றனர். தற்போது 4 மில்லியனாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அபுதாபில் இயங்கி வரும் இந்திய தூதரக அலுவலக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாழும் இந்தியர்கள் நலன் தொடர்பாக முழு அக்கறை செலுத்தி வருகிறோம். பொதுவாக இங்குள்ள நிறுவனங்கள் பணியில் உள்ள போது ஏற்படும் இறப்பு மற்றும் காயமுற்றோருக்கு மட்டுமே குறைந்த அளவில இன்ஸ்சூரன்ஸ் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை சற்று மாற்றி அமைக்கும் விதமாக இங்குள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சில் இந்தியர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாழ்வு பாதுகாப்பு திட்டத்தின் படி பணியின் போது இறப்பு என்பதை காட்டிலும் இயற்கை மரணத்திற்கும் இந்த இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூல் வெளியீட்டு விழா

இந்தியர்கள் இறப்புக்கு 17,லட்சத்து14ஆயிரத்து 156 ரூபாய் (திர்காம் 75,000) கிடைக்கும் . ஆண்டுக்கு 72 திர்காம் (இந்திய மதிப்பு ரூ. 1,645) செலுத்தினால் போதும். இந்தியர்களுக்கான பணி விசா வழங்கும்போதே இந்த இன்சூரன்ஸ் திட்டம் சேர்க்கப்படும். விபத்திலோ, இயற்கையாகவோ மரணம் ஏற்பட்டால் உடலை திரும்ப பெறும் அந்த நேரத்தில் உடனடியாக இரண்டே முக்கால் லட்சம் வரை வழங்கப்படும் எனவும் குறைவான தொகை செலுத்தினால் அதற்கேற்ப இன்சூரன்ஸ் காப்பீட்டு பலன் தொகை மாறும் என தெரிவித்துள்ளனர்.

MUST READ