முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி யாக பொறுபேற்றவுள்ளார்.
தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றியை ஆவணமாக பதிவு செய்யும் புத்தகம் தென் திசையின் தீர்ப்பு புத்தகம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பெற்று கொள்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றியை திமுக கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது ?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம் என்னென்ன ?
2023 இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி.
திமுக கூட்டணி கட்சிகள் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக தேர்தல் அறிக்கை திமுக வேட்பாளர் பற்றிய விவரங்கள், முதலமைச்சர் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள்,புள்ளி விவரங்கள், இன்ஃபோகிராபிக் என விரிவாக பதிவு செய்யும் நூலாக தென் திசையின் தீர்ப்பு நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.