ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் காட்டி வரும் தீவிரம் மற்றும் வியூகங்களைப் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.


ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய இலக்குகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எட்டிவிட்டதாகவும், இன்னும் சில வாரங்களில் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரானை “கற்காலத்திற்கு” (Stone Ages) கொண்டு செல்வோம் என்று எச்சரித்த டிரம்ப், ஈரானின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று தகர்க்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தைச் சீர்செய்ய மற்ற நாடுகளும் தைரியமாக முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்படி என்னதான் இஸ்ரேலை டிரம்ப் பாராட்டினாலும் மறுபுறம், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) “ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4” (Operation True Promise 4) என்ற பெயரில் இஸ்ரேல் மீது 90-வது கட்டத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv), ஈலாட் (Eilat), மற்றும் டிமோனா (Dimona) ஆகிய பகுதிகளில் உள்ள மிக முக்கியமான ராணுவ மற்றும் அணுசக்தி மையங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ‘எமாட்’ (Emad) மற்றும் பல தலைப்புகளைக் கொண்ட ‘கத்ர்’ (Qadr) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது இஸ்ரேல் மட்டுமல்லாமல் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தினாலும், அதையும் மீறி சில ஏவுகணைகள் பெடா டிக்வா (Petah Tikva) போன்ற பகுதிகளில் விழுந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருவதால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் கடல்வழி பாதையில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா தொடர்ந்து ராஜதந்திர ரீதியாகப் பேசி வருகிறது.
அமெரிக்கா இந்தப் போர் விரைவில் முடியும் என்று கூறினாலும், ஈரானின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தவில்லை – துபாய் மறுப்பு
