spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நார்வே நாட்டில் இறப்பது சட்டவிரோதம்

நார்வே நாட்டில் இறப்பது சட்டவிரோதம்

-

- Advertisement -
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உண்டு. இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது, இது சட்டவிரோதம், இது குற்றச்செயல் இது போல விதிமுறைகளும், சட்டங்களும் உண்டு. இந்தியாவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது சட்டவிரோதம். ஆனால், தாய்லாந்தில் கஞ்சாவை பயன்படுத்தி உணவே தயாரிக்க அரசே அனுமதி அளித்துள்ளது. இது போல நாடுகளுக்கு நாடு விதிமுறைகள் மாறும். ஆனால், ஒரு நாட்டில் அனுமதி இல்லாமல் இறந்து போவது சட்டவிரோதம்.

நார்வே நாட்டின் லாங்கியர்பைன் எனும் சிறிய நகரத்தில் தான் இறந்து போவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. அந்த நகரத்தில் யவருமே இறந்து போக அனுமதி இல்லை. இந்த சட்டம் பல ஆண்டுகளாக நடைமுறைல் உண்டு. பல ஆண்டுகளாக மக்களும் பின்பற்றி வருகிறார்கள்.

we-r-hiring

 

இந்த நகரத்தில் பனி பொழிந்துகொண்டே இருப்பதால், மிகவும் குளிராக இருக்குமாம். அதிக குளிராக இருப்பதால, இங்க இறப்பவர்களின் உடல்கள் அழுவது கிடையாது. அதுமட்டுமில்லாமல், பத்து இருபது வருடங்கள் ஆனாலும், அவர்களின் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளும் உயிரோடு இருப்பதாகவும் ஒரு ஆராய்ச்சில் தெரிய வந்துள்ளது.

இறப்பவர்களின் உடல்களில் இருந்து பாக்டீரியா, வைரஸ் போன்ற நச்சுக்கிருமிகள், உயிரோட இருக்கும் மனிதர்களுக்கு பரவியது. இதனால், 2016-ல் அறியப்படாத தொற்று நோய் பரவி, நூற்றுக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், மக்கள் அனைவரும் பயந்துபோய், ஊருக்குள் இனி யாருமே இறக்கக்கூடாது இந்த ஊரில் எந்த உடலும் புதைக்கப்படக்கூடாது என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.
யாரேனும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போகும் நிலைமைக்கு வந்தாலோ, அல்லது வயது மூப்பினால் இறக்கும் தருணம் சென்றாலோ, அவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இது தான் அந்த ஊரின் வழக்கமாக உள்ளது. உயிரோடு இருக்கும் மக்களை பாதுகாக்க, இப்படி வினோதமான விதிமுறைய கொண்டு வருவதற்கு பதிலாக, பாதுகாப்பான இடத்தில் மயானத்தை அமைத்து உடல்களை தகனம் செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ