ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் தற்காலிகமாக கட்டுப்பாடு விதித்தது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சந்தையில் தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, “புஷ்பக்” மற்றும் “பரிமல்” என்ற இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழ்நிலையில் இந்தியக் கப்பல்கள் அந்த எல்லையை கடந்து சென்றது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர, பெர்ரோல், டீசல் பிரச்சனை இருக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், தாய்லாந்து கப்பலுடன் வந்த மற்றொரு கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
