Homeசெய்திகள்உலகம்நேபாள பெருவெள்ளப் பேரழிவு: மாயமான 320 இந்தியர்கள் - NDRF மீட்புக் குழுவை அனுப்பத் தயார்...

நேபாள பெருவெள்ளப் பேரழிவு: மாயமான 320 இந்தியர்கள் – NDRF மீட்புக் குழுவை அனுப்பத் தயார் நிலையில் இந்தியா!

-

- Advertisement -

நேபாள பெருவெள்ளம்: 320 இந்தியர்களின் நிலை என்ன? – NDRF குழுவை அனுப்ப இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆயத்தம்!நேபாள பெருவெள்ளப் பேரழிவு: மாயமான 320 இந்தியர்கள் - NDRF மீட்புக் குழுவை அனுப்பத் தயார் நிலையில் இந்தியா!

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி 320 இந்தியர்கள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியாத சூழல் நிலவுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

உயிரிழப்பு 538 ஆக உயர்வு – ஆயிரக்கணக்கானோர் மாயமடைப்பு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பாறை ஏரிகள் உடைப்பால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுக் காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பெருவெள்ளத்திற்கு 5 பேர் உயிரிழந்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளையும் சேர்த்து சுமார் 1,400க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

320 இந்தியர்களின் நிலை என்ன? – வெளியுறவு அமைச்சகம் தகவல்

இப்பேரழிவில் 320 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 100 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மாயமான இந்தியர்களைக் கண்டறியும் பணிகளும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மீட்புப் பணிக்கு NDRF குழு தயார்: நேபாள அரசின் பதிலுக்காகக் காத்திருப்பு

பாதிக்கப்பட்ட நேபாளப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிவேகமாக மேற்கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) அனுப்ப மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக நேபாள அரசுக்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அரசின் முறைப்படி அனுமதி மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  அண்டை நாட்டிற்குத் தேவையான அனைத்து அவசரகால உதவிகளையும் உடனுக்குடன் வழங்க இந்தியா முழுச் தயார் நிலையில் உள்ளது.

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

MUST READ