நியூயார்க்கில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
நியூயார்க்கில் நடைபெற்ற செல்ல நாய்கள் கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெஸ்ட் மின்ஸ்டார் நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில் 210 வகைகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டனர்.

நாய்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப குழுக்கலாக குறிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. கண்காட்சியில் ஒவ்வொரு நாயும் தனித்தனியாக திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இப்போட்டியில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பட்டி என்ற நாய் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

போட்டியில் வென்ற நாயுடன் சிறுவர் சிறுமிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல கலிபோர்னியா மாகாணத்திலும் வருடாந்திர நாய்கள் அணிவகுப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கண்கவர் நிறங்களில் விதவிதமான ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து வந்த நாய்க்குட்டிகள் தங்களை வளர்ப்பவர்களுடன் சாலையில் அணிவகுத்து சென்றனர்.


