spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பிரிட்டானில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

பிரிட்டானில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

-

- Advertisement -
பிரிட்டானில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
பிரிட்டனில் வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டானில்

பிரிட்டானில் ஊதிய உயர்வு கேட்டு பயிற்சி மருத்துவர்கள் உட்பட 60 ஆயிரம் மருத்துவர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

we-r-hiring

திங்கட்கிழமை அவர்கள் தொடங்கிய வேலை நிறுத்தத்தால் லண்டன் உட்பட முக்கிய நகரங்களில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 26 சதவீத ஊதிய உயர்வு கேட்டு அவர்கள் அறிவித்த மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு அவசர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

பிரிட்டானில்

போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பிரிட்டன் அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மருத்துவர்கள் அல்லாமல் ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் ஊதியம் மிகக் குறைவானது என்பது ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கே தெரியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டானில் in Britain

எனவே பிரதமர் ரிஷி சுனக் விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

MUST READ