Homeசெய்திகள்உலகம்அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம்: "இதுதான் கடைசி வாய்பு" - ஒப்பந்தம் இல்லையேல் தாக்குதல்...

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம்: “இதுதான் கடைசி வாய்பு” – ஒப்பந்தம் இல்லையேல் தாக்குதல் என டிரம்ப் எச்சரிக்கை

-

- Advertisement -

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் மோதல் முனையில் நிற்கின்றன. நடந்து வரும் பேச்சுவார்தைகள் ஈரானுக்கான “கடைசி வாய்பு” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து உடனடியாக உடன்பாடு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

we-r-hiring

ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் அரசு உடனடியாக மறுத்துள்ளது. “அமெரிக்காவுடன் எந்த புதிய பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று தெஹ்ரான் தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

டிரம்பின் கடைசி எச்சரிக்கை
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், “ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது நடக்கும் பேச்சுக்கள்தான் அவர்களுக்கு கடைசி வாய்பு. ஒப்பந்தம் வரவில்லை என்றால் அடுத்த கட்டம் ராணுவ தாக்குதலாக மட்டுமே இருக்கும்” என்று ஆவேசமாக பேசினார்.

2018-ல் ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது. தற்போது மீண்டும் பேச்சுவார்தைக்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்ட நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மறுப்பு
டிரம்பின் கருத்துக்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், “அமெரிக்காவுடன் தற்போது எந்தவிதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அழுத்தத்தின் மூலம் எங்களை மிரட்டி ஒப்பந்தம் செய்ய வைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “அமெரிக்கா முதலில் தடைகளை நீக்கிவிட்டு, நேர்மையான முறையில் பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்தை சாத்தியம்” என்றும் ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

வளைகுடாவில் பதற்றம்
இந்த அறிவிப்புக்கு பிறகு வளைகுடா பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலையும் கடும் ஏற்றத்தை கண்டுள்ளது. ஐநா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரு தரப்பையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளன. அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த பனிப்போர், அடுத்த சில வாரங்களில் எந்த திசையில் செல்லும் என்பதை உலகமே உற்றுநோக்கி வருகிறது..

திருமணமானவர்களுக்கு உள்ள சட்டம் ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

MUST READ