Homeசெய்திகள்உலகம்அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ...- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான...

அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ…- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான வாக்குமூலம்!

-

- Advertisement -

இயற்கைச் சீற்றங்கள் மனித வாழ்க்கையை நொடிப்பொழுதில் தலைகீழாக மாற்றும் என்பதற்கு சான்றாக, அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது.அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ...- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான வாக்குமூலம்!

திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட இந்த திடீர் இயற்கை பேரிடர், 160-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

we-r-hiring

கண்முன்னே புதைந்த மனைவி: முதியவரின் வேதனை
இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 68 வயதான கேசவ் பிரசாத் பரால் என்ற முதியவர் அளித்த வாக்குமூலம் கேட்போரின் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது:

என் கண் முன்னாடியே ஒரு பெரிய மண் சுவர் போன்ற சேறு எங்களை நோக்கி மிக வேகமாக வந்தது. நான் என் மனைவியின் கையைப் பிடிக்க முயன்றேன், ஆனால் அந்த பெருவெள்ளச் சேறு நொடிப்பொழுதில் அவரை இழுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டது.

அவள் இப்போது அந்த சேற்றுக்கு அடியில்தான் எங்கோ இருக்கிறாளோ… எங்களை விட்டுப் போய்விட்டாள். இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்தியப் பயணிகளின் நிலை என்ன?
நேபாள வெள்ளப் பாதிப்பில் இந்தியாவைச் சேர்ந்த 133 சுற்றுலாப் பயணிகளும், 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் சிக்கி, தொடர்புகொள்ள முடியாத சூழலில் உள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசு இயந்திரம் தயார்நிலை – பிரதமர் உறுதியளிப்பு
இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் மக்களுடன் இருக்கும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, நேபாள வெள்ள நீர் இந்திய எல்லையான பீகார் மாநிலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதால், இந்தியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) 9 குழுக்களைப் பீகாரில் தயார் நிலையில் நிறுத்தி, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

கைலாஷ் யாத்திரை சென்ற 150 பேரும் பத்திரமாக உள்ளோம் – ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ வெளியீடு!

MUST READ